Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு.. இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பு.. ஆதாயம் சீராக இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பெற்றோர்களின் தேவைகளை அறிந்து உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சீராக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே அமையும். பிள்ளைகளின் செயல்பாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும், விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை நீங்கள் பெற முடியும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். சகோதரர்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். இன்று கோபம், படபடப்பு குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகவே கிடைக்கும். பாடங்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |