தொலைதூர மனநல ஆலோசனை பெற 14 41 6 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை டி எம் எஸ் வளாகத்தில் நட்புடன் உங்களோடு மனநல சேவை எனும் தொலைபேசி வழியே மனநல சேவை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் அப்போது கூறியதாவது தொலைதூர மனநல சேவை மையம் 2 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டிருக்கிறது மனநல ஆலோசனை பெற 144 என்ற புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசுபவர்களுக்கு மனநலம் ஆற்றுப்படுத்தும் சேவைகள் மனநல ஆலோசர்களுடன் வீடியோ ஆலோசனைகள் தொடர் சிகிச்சைக்கான வழிகாட்டு முறைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே 144 சேவை தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை அடுத்து நட்புடன் உங்களோடு மனநல சேவை எனும் திட்டத்தில் இரண்டு மனநல மருத்துவர்கள் 4 உளவியலாளர்கள் 20 ஆற்றுப்படுத்துனர்கள் மனநல ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றார்கள்.