தொகுப்பூதிய அடிப்படையில் கணினி பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுனர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு 1.7.2022 அன்று 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
மேலும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை இதற்கு பி.எட் தகுதியுடன் பிஎஸ்சி அல்லது பிசிஏ அல்லது பிஎஸ்சி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும் மாதம் 15 ஆயிரம் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சீனிவாசா காலனி, சூரமங்கலம் – 636005 என்ற முகவரியில் நவம்பர் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்களுடன் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.