குறைவான தொகையை முதலீடு செய்வதால் லட்சக்கணக்கில் எளிதாக ஒரு சேமிப்பை தங்களால் உருவாக்கிக்கொள்ள இயலும். அதற்கு தபால் அலுவலக தொடர்வைப்புத் திட்டமும் ஒன்றாக இருக்கிறது. 100 ரூபாயிலிருந்து முதலீட்டை நீங்கள் இங்கு துவங்கலாம். 5 வருடங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்பஸ் தொகை இங்கு வழங்கப்படுகிறது.
தபால் அலுவலகம், தொடர்வைப்புத் தொகைக்கு (RD) இப்போது 5.8 % வருடாந்திர வட்டி விகித கூட்டுத் தொகையை காலாண்டுக்கு வழங்குகிறது. நாளொன்றுக்கு ரூபாய்.100 முதலீடு செய்வதன் வாயிலாக 5 வருடங்களில் முதிர்வுத்தொகையாக 2,10,000 ரூபாயை பெறலாம் என அதன் இணையதளத்தில் தகவல் இடம்பெற்று இருக்கிறது.
நகர்ப்புறம் -தொலைதூர கிராமங்கள் வரை தபால் அலுவலகக் கிளையில் வைப்புக்கணக்கை (Deposit Account) துவங்கலாம். பயனாளி அதிகபட்சம் 3 நபர்களைக் கொண்ட ஒரு கூட்டுக்கணக்கை துவங்கலாம். சிறார்களும் தங்களின் பாதுகாவலரின் கீழ் இக்கணக்குகளைத் திறக்கலாம். அஞ்சல் அலுவலக தொடர்வைப்பு தொகையின் (RD) முதிர்வுகாலம் 5 வருடங்கள் ஆகும். சில கட்டுப்பாடுகளை கடைபிடித்து ஒருவர் 3 வருடங்களுக்கு பிறகும் நிதியை பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்வைப்பு தொகையின் மீதான கடன் வசதியும் இருக்கிறது. விதிகளின் அடிப்படையில் 12 தவணைகளை டெபாசிட் செய்தபின், 50% வரை நீங்கள் கடனாக பெற்றுக் கொள்ளலாம். கடனை மொத்தமாகவோ (அ) தவணையாகவோ திருப்பிச்செலுத்தலாம். கடனுக்குரிய வட்டிவிகிதம் RD மீதான வட்டியைவிட 2 % அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.