Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டியில் வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டிய கும்பல்”….. 5 பேர் அதிரடி கைது….!!!!

கோவில்பட்டியில் வீடு புகுந்து கார் மீது ஏறி நின்று தாய், மகளை அரிவாளை காட்டி மிரட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்த தாமோதர கண்ணன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். இவரின் மனைவி லாவண்யா. இவர்களின் வீட்டின் முன்பாக கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருக்கின்றது. சம்பவத்தன்று இவர்களின் வீட்டின் எதிரே இருக்கும் வீட்டில் கோழி திருட்டுப் போனதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது லாவண்யாவின் வீட்டில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார்கள்.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு லாவண்யாவின் குடும்பத்தின் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இந்நிலையில் தீபாவளியன்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் லாவண்யாவின் வீட்டு வாசலில் பட்டாசு வெடித்து தகராறில் ஈடுபட்டார்கள். இதை கண்டித்த லாவண்யாவும் அவரின் தாயாரும் அறிவாளை காட்டி மிரட்டினார்கள்.

மேலும் லாவண்யாவின் வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது இளைஞர் ஒருவர் ஏறி அறிவாளி காட்டி மிரட்டி இருக்கின்றார். மேலும் கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு அங்கே இருந்து அனைவரும் சென்று விட்டார்கள். இது குறித்து லாவண்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, சங்கிலி பாண்டி, நாகராஜ், பொன் பாண்டி, மகேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தார்கள். மேலும் தலைவராக இருக்கும் ஐந்து பேரை தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |