ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் பல மாதங்களை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு உக்ரேனிய நகரங்களை குறிவைத்து பதிலடி கொடுக்கும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகின்றது. இந்த நிலையில் உக்ரேனில் போர் தீவிரமடைகின்ற காரணத்தினால் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அவசர உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரேனின் அணுமின் நிலையங்களில் அணு கழிவுகளை பயன்படுத்தி நாசக்கார ஆயுதங்களை அந்த நாட்டு அரசு தயாரித்துக் கொண்டிருப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு முன் வைத்துள்ளது.
இதனை மறுத்திருக்கின்ற உக்ரைன் அணுசக்தி அமைப்பு ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள சபோரிசியா அணுமின் நிலையத்தில் தான் ஆபத்தான அணுக்கருவிகளைக் கொண்டு ரஷ்யா ஆயுதங்களை தயாரிப்பதாக அந்த அமைப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரி தங்கள் மீது நாசக்கார ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்த உக்ரைன் தயாராகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அணுக்கதிர்வீச்சு பொருளாலான அந்த ஆயுதங்கள் மூலம் உக்ரைன் போரை மிகப்பெரிய அழிவு பாதை கொண்டு செல்ல வேண்டும் என உக்ரைன் திட்டமிட்டு இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரி செர்ஜி ஷோய்குவுடன் மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றியும் இரு மந்திரிகளும் விவாதித்துள்ளனர் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் உக்ரைன் விவகாரம் பேச்சுவார்த்தை மற்றும் அரசாங்க ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் அணு அல்லது கதிரியக்க ஆயுதங்கள் மனித குலத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. அதனால் அணு ஆயுதங்களை இருதரப்பும் பயன்படுத்தக் கூடாது பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்குமார் சிங் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.