Categories
தேசிய செய்திகள்

காரின் மேற்கூரையில் உட்கார்ந்து…. வாலிபர்கள் செய்த செயல்…. வைரல் வீடியோ….!!!!

குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில பேர் கும்பலாக கார் ஒன்றின் மேற்கூரையில் அமர்ந்தபடி சாலையில் சென்று இருக்கின்றனர். கார் இரவில் மெதுவாக நகர்ந்து போகும்போது, காரின் மேலே இருந்தவர்கள் பட்டாசுகளை வெடித்தபடி சென்று உள்ளனர். மேலும் சில பேர் காரின் முன் பகுதியில் அமர்ந்தபடியும் சென்று இருக்கின்றனர். இவ்வீடியோவை ஆமதாபாத் காவல்துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். அதன்பின் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை எளிதில் அடையாளம் கண்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதுடன், நகரசாலை பகுதிகளில் அமளியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் படி அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களது செயல்கள் மற்றவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் எனும் அடிப்படையில் தெருக்களிலேயே அவர்களை காவல்துறையினர் தோப்புகரணம் போடும்படி கூறினர். இறுதியில் அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூகஊடகத்தில் வைரலாகிய சூழ்நிலையில், 3.3 லட்சம் பேர் அதனை பார்வையிட்டுள்ளனர். 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். அத்துடன் காவல்துறையினருக்கு பலரும் தங்களது கடமையை உடனடியாக செய்ததற்காகவும், சட்டஒழுங்கை பராமரித்ததற்காகவும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |