வர்த்தக ரீதியில் பிராட்வே மிக முக்கிய பகுதியாகத் திகழ்ந்து வருகிறது இங்கு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் வசதிகள் போன்றவை தற்போது இருக்கிறது. இங்கிருந்து சென்னை மாநகரின் தெற்கு பகுதி மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பிராட்வே பேருந்து நிலையத்தை மையமாக வைத்து புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருக்கிறது. அதாவது பேருந்து நிறுத்தும் இடங்கள் வர்த்தக பகுதி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி போன்றவை மல்டி மாடல் பேருந்து நிலையமாக மாற இருக்கிறது.
அதிலும் குறிப்பாக 21 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட இருக்கிறது இதில் கடைகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், தாங்கும் விடுதிகள் போன்றவை வர இருக்கிறது. இந்த மல்டி மாடல் திட்டத்தின் மூலமாக பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மாநகருக்கு உள்ளேயும் புறநகர் பகுதிகளுக்கும் செல்லக்கூடிய விதமாக பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதற்காக மாநகராட்சியிடம் இருந்து முறையான அனுமதி பெறப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய சிஎம் ஆர்எஸ்எஸ் தொடர்பாளர் எல் கிரிராஜன் பிராட்வே மல்டி மாடல் பேருந்து நிலைய திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு சமீபத்தில் டெண்டர் சேர்க்கப்பட்டிருக்கிறது சரியான நிறுவனத்தின் கையில் ஒப்படைக்கப்பட்ட அறிக்கை தயார் செய்யப்படுகிறது. இந்த அறிக்கை முறையாக ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் அதன் பின் இரண்டு வருடங்களில் மல்டிமாடல் திட்டத்தை முழுமையாக கட்டி முடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கட்டுமான பணிகள் முடியும் வரை பேருந்து நிலையத்திற்கு வெளியே அனைத்து பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்படும் என தெரிகின்றது. முன்னதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் கீழ் பிராட்வே மல்டி மாடல் பேருந்து நிலைய திட்ட பணிகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 2022- 2023 பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிராட்வே பேருந்து நிலையம் முன்பு எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்திலும் மல்டிமாடல் திட்டம் ஒன்று செயல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.