மாஸ்டர் படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அப்படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்களின் எதிர்ப்பத்தை அதிகரித்துள்ளது. விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடத்து இருப்பது படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் மாஸ்டர் பாடம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு 95% நிறைவடைந்து விட்டது என்றும் , படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் மாஸ்டர் படம் திட்டமிட்டபடி படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மரண காத்திருப்பில் உள்ளனர்.