Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வார்டன்களிடையே “லெஸ்பியன்” பழக்கம்…. சிறைக்குள் குடுமிப்பிடி சண்டை…!!!!

சேலம் ஏற்காடு ரோட்டில் பெண்கள் கிளை சிறை உள்ளது. இங்கு 45-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பெண் வார்டன்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சிறையில் சில வார்டன்களிடையே ‘லெஸ்பியன்’ பழக்கம் தொடர்பாக நடந்த அடிதடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்தான வார்டன் ஒருவரும், கணவரை பிரிந்து வாழும் வார்டன் ஒருவரும் ஒன்றாக வசித்துள்ளனர். இருவருக்குமிடையே லெஸ்பியன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவாகரத்தான வார்டன், இன்னொரு புது வார்டனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதால் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வார்டன்கள் கூறுகையில், ‘‘இரு வார்டன்களும் இரவு நேரங்களில் சிறையிலேயே உறவு வைத்துக்கொள்கின்றனர். தங்களுக்கு நீதிமன்றமே அனுமதி வழங்கிவிட்டதாக கூறிவருகின்றனர். இந்நிலையில்தான் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் பணம் வசூலித்து உயர்அதிகாரிக்கு கொடுத்து வருகிறார். இதனால் இந்த சண்டையை அவர் கண்டு கொள்ளவில்லை’ என்றனர். இதுகுறித்து சிறை விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |