புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் அருகே 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு ராஜா என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ராஜா(22), சின்ராஜ்(21), பிரசாத்(19) ஆகியும் மூன்று பேரும் சிறுமியை தூக்கி சென்று மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்து 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது வீட்டில் இருந்த விஷயத்தை குடித்தார். இதனை பார்த்த உறவினர்கள் சிறுமியை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.