புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களபம் கிராமத்தில் கிராமிய கலைஞரான இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் உருமராஜா, முத்துச்செல்வன் ஆகிய இரண்டு சிறுவர்களும் தாளம், இசையோடு விழிப்புணர்வு பாடலை பாடி அசத்தியுள்ளனர்.
அந்த பாடலில் மஞ்சப்பை எடுத்து செல்ல யாரும் வெட்கப்படக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள் மண்வளத்தை கெடுப்பது மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களுக்கும் கேடு விளைவித்து, மண்ணின் தன்மையை கெடுத்து விடும். எனவே அரசுக்கு ஒத்துழைப்பு தந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.