இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி அழகியநம்பிபுரம் பகுதியில் மைக்கில் மதன்சிங்(27) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதன் சிங் சினேகா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த மதத்தின் தனது மனைவியின் செல்போனை உடைத்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து சினேகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மதன் தனது மனைவியை விட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்க அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சினேகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து வழக்கு பதிவு இந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.