சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டு வருகின்றது.
நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றவர்களிடம் ரூ.5,000, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.15 ஆயிரம், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியவவர்களுக்கு ரூ.5 ஆயிரம், அதிவேகமாக கனரக வாகனங்கள் ஓட்டியவர்களிடம் ரூ.4 ஆயிரம் என வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையே “பழைய வண்ணாரப்பேட்டைைை, திரெளபதி, மற்றும் ருத்ரதாண்டவம்” போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி வாகன சட்டம் குறித்து பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல பொது இடங்களில் #புகை பிடிப்பவர்களுக்கு அபராத தொகையையும், சிறுவர்களுக்கு #coollip மற்றும் #குட்கா விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கும் அபராதத்தை 10 மடங்கு உயர்த்தி அறிவிக்க முதல்வர் திரு @mkstalin சார் அவர்களை கேட்டு கொள்கிறேன்.. pic.twitter.com/TLLkPE9deT
— Mohan G Kshatriyan (@mohandreamer) October 27, 2022
அதில், “வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராத தொகையையும், சிறுவர்களுக்கு கூலி மற்றும் குட்கா விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கும் அபராதத்தை 10 மடங்கு உயர்த்தி அறிவிக்க முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் சார் அவர்களை கேட்டு கொள்கின்றேன்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.