Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்னம்மா ஆச்சு உனக்கு….. திடீர்னு மயங்கிட்டா டாக்டர்….. மனைவி மரணம்…. நாடகமாடிய கணவர் கைது….!!

திருவள்ளூர் அருகே மனைவியை கொன்றுவிட்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறி நாடகமாடிய கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த கண்ணன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வாசு. இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சத்தியவேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி இவர் கும்மிடிப்பூண்டியில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கார்த்தி தினமும் வேலைக்கு வாசுவின் வேனில் ஏற்றிச் செல்வார். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திடீரென வாசு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதை நாள்தோறும் மனைவி கண்டித்து வந்துள்ளார். இவ்வாறு இருக்க நேற்று முன்தினம் தகராறு முற்றவே ஆத்திரத்தில் மனைவியை அடித்து உதைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் வாசு.

இதையடுத்து உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்து விட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் மனைவியை அனுமதித்துள்ளார். அங்கு  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின் இதுகுறித்து காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில்,

அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவரவே கணவன் தப்பி ஓடினார். தப்பி ஓடிய அவரை சத்தியவேடு காவல் நிலைய அதிகாரிகள் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |