கடந்த ஆண்டு நடைபெற்ற துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி பெரியார் பற்றி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெரியார் குறித்து ரஜினி பேசிய கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பல இயக்குநர்களும் தங்கள்எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.
மேலும் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டை முற்றுகை இட போவதாக அவரது எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். இதனால் ரஜினியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரின் ரசிகர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து.போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பை வழங்கியது காவல்துறை.
இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை விலக்கி கொள்ளுமாறு ரஜினி கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினியுடன் காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் சந்திக்கிறார்.