தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக நடப்பு வருடத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மேற்படிப்பு சென்றால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த திட்டமானது புதுமைப்பெண் திட்டம் என்ற முறையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கல்லூரிகளில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கல்வி மேற்படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பில் முதலாம் வருடத்தில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள். எனவே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக வருகிற 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.