தமிழகத்தில் நடைபாண்டில் மட்டும் ஆன்லைன் வேலை வாய்ப்பு என்ற பெயரில் நடைபெற்ற மோசடியில் 2120 பேர் பணத்தை பறி கொடுத்துள்ளனர் என சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்பு கொடுக்கும் பெயரில் பல ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.அதில் பதிவு செய்துள்ள விவரங்களை திருடும் கும்பல் அதே நிறுவனம் பெயரில் தொடர்பு கொண்டு பணம் பறித்து வருகிறார்கள். நடப்பு ஆண்டில் மட்டும் அதாவது 10 மாதங்களில் 2120 பேர் அளித்த புகார் படி சைபர் கிரைம் போடி சார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனவே வேலைக்கு பதிவு செய்திருப்பவர்கள் தங்கள் போனுக்கு வரும் எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை கவனமுடன் கையாள வேண்டும். முதலில் அந்த தகவல் உண்மையானதா என உறுதி செய்ய வேண்டும். முடியாத பட்சத்தில் எந்த வகை கட்டணமும் செலுத்தக்கூடாது. ஆன்லைனில் உண்மையான வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் நிறுவனங்களின் பேரில் மோசடி சம்பவங்கள் நடந்து வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.