ஐடியா வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க்குகள் கட்டண சேவையை உயர்த்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட பெரிய நெட்வொர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அவ்வபோது நஷ்டங்களையும் சந்தித்து வருவதால் வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நெட்வொர்க்குகள் தங்களது விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர். அதன்படி,
குறைந்தபட்ச டேட்டாவிற்கான கட்டணமாக ரூபாய் 35 ஆகவும் , குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணத்தை ரூபாய் 50 ஆகவும் உயர்த்த திட்டமிட்ட உள்ளது. மேலும் செல்போனில் பேசும் போது நிமிடத்திற்கு ரூபாய் 6 பைசா வசூலிக்கவும் முடிவு செய்து உள்ளது. இந்த முறையை வருகின்ற ஏப்ரல் 1 முதல் இந்நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.