Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா” படக்குழு இது காட்சிகளை திருடியதாக பரபரப்பு புகார்…. உண்மை நிலவரம் என்ன?…!!!!

காந்தாரா திரைப்படத்தில் இடம்பெறும்  “வராஹ ரூபம்” பாடல் தங்களின் “நவரசம்” ஆல்பமிலிருந்து திருடப்பட்டுள்ளதாக தைக்குடம் இசைக்குழுவினரின் குற்றம் சாட்டியுள்ளனர்.

இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்து வெளியிட்டும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையை படைத்துள்ளது. கே.ஜி.எப் திரைப்படத்துக்கு பின் இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படமாக காந்தாரா மாறியுள்ளது. இந்தத் திரைப்படத்தை ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.

இப்படத்தில் இடம்பெறும் “வராஹ ரூபம்” பாடல் தங்களின் “நவரசம்” ஆல்பமிலிருந்து திருடப்பட்டுள்ளதாக தைக்குடம் இசைக்குழுவினரின் சமூக வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டியது. மேலும் இது குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு “காந்தாரா” திரைப்படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தில் இசையமைக்கப்பட்டுள்ளதால் ஒன்று போல் தோன்றலாம்” என அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |