ஜப்பானில் டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்த தாமோதரன் என்வருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.
கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் இருக்க பிப்.,19 வரை அங்கேயே கப்பல் நிற்கும் என ஜப்பான் ஏற்கனவே கூறியது. இதையடுத்து கடந்த பிப் .,19ம் தேதி கப்பலில் இருப்பவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதவர்களை வெளியேற்றினர். ஆனால் 132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் கப்பலில் சிக்கி இருந்தனர்.
இவர்கள் நேற்று முன்தினம் மீட்கப்படனர். எனினும் வைரஸ் பாதிப்பு இருந்த சிலர் அங்கேயே உள்ளனர். இந்த நிலையில் கப்பலில் இருக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்த தாமோதரன் என்வருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருந்து தாயகம் திரும்பிய அன்பழகன் என்பவர் வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறினார்.