தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகன். இவர் மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக ஓடிடி தளத்தில் வெளியான மாறன் படத்திலும் நடித்திருக்கிறார். இவர் சமூக வலைதளத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இருப்பினும் அவருக்கு அதன் பிறகு சரியான வாய்ப்புகள் வராமல் இருந்தது. இந்நிலையில் இரண்டு முக்கிய படங்களில் கதாநாயகியாக நடக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
அதில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் தங்கலான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் மாளவிகா, மற்றொரு கதாநாயக பார்வதி நடிக்கிறார். தெலுங்கில் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் மாளவிகா மற்றொரு கதாநாயகன் நிதி அகர்வால் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு எந்தவித அறிவிப்பும் இன்றி கடந்த பத்து நாட்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு இரண்டு முக்கிய படங்களின் நடிப்பதன் மூலம் மாளவிகா மோகன் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க உள்ளார். இந்த தகவலால் அவரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.