கே.விக்ஷஆனந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பவன் ராஜகோபாலன். இவர் தற்போது “விவேசினிக்’ என்ற திரில்லர் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகியுள்ளது. பேயை தேடிச் செல்லும் ஒரு பெண்ணின் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இது குறித்து படத்தின் இயக்குனர் பவன் ராஜகோபாலன் கூறியது, பிராகிருத மொழி சொல்லான விவேசினி என்றால், எதையும் ஆராய்ந்து பொருள் தேட விரும்பும் பெண் என்று பொருள்.
பேய்கள் உலவுவதால் பெண்கள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கும் காட்டுக்குள் சென்று உண்மைகளை கண்டறிய நினைக்கிறார் பகுதியறிவு செயற்பாட்டாளர் ஜெயராமன். தவிர்க்க முடியாத காரணங்களால் அங்கு தன் மகள் சக்தியை அனுப்புகிறார். சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் அவர் நடுங்கி இருப்பாள். பகுத்தறிவாளர் வளர்க்கப்பட்ட சக்தி கேள்விகள் எழுப்பி அவற்றுக்கான விடைகளை தேடி ஓடும் விவேசினியாக மாறுகிறார். இதில் ஜெயராமனாக நாசர், சக்தியாக காவியா நடித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தை திரையரங்கில் வெளியிடுகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.