மதுரை ஹைகோர்ட்டில் மகேஷ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கொசுக்களால் மலேரியா, சிக்கன் குனியா போன்ற பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. கொசுக்களின் உற்பத்தி தற்போது அதிகரித்துவிட்ட நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கு போதுமான அளவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே அதிநவீன மருந்துகளை பயன்படுத்தி கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். அதன் பிறகு கொசு கட்டுப்பாட்டு மையத்தில் நிரந்தர ஊழியர்களை பணியில் அமர்த்துவதோடு, கொசு கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான மருந்து வசதிகளுடன் கூடிய தனி வார்டு வசதி அமைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் நல்ல தண்ணீரிலும் கழிவு நீரிலும் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி கொசு ஒழிப்பை தடுப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கொசுக்கள் ஆரம்பத்தில் உற்பத்தியாகும் போதோ அதை அழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
டெங்கு, சிக்கன் குனியா போன்ற அனைத்து விதமான பாதிப்புகளுக்கும் மருந்துகள் தயார் நிலையில் இருப்பதோடு, 24 மணி நேரம் வார்டுகளும் தயாராக இருக்கிறது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மற்றும் தாலுகா மருத்துவமனை போன்றவைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டதோடு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஐசியூ வசதிகளும் இருக்கிறது இருக்கிறது என்றும் கூறப்பட்டது. மேலும் இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தொடர்ந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.