இந்தியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அனைத்து மொழிகளிலுமே சூப்பர் ஹிட் அடித்து வரும் நிகழ்ச்சி என்றாலே அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சியில் சாதாரண ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இருப்பினும் பலர் இதை உளவியல் ரீதியாக தவறு என்றும் மிகவும் ஆபாசமாக இருக்கிறது என்று விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. அதேபோல தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 6 21 போட்டியாளர்களுடன் தொடங்கி, இந்த சீசனில் 7 பேர் எவிக்சன் ஆகிவிட்டனர். தற்போது 14 பேர்களுடன் ஹவுஸ் மேட்டுகளுக்கு இடையே போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ரோகித் சாஹினி- மரினா ஆப்ரஹாம் கணவன் மனைவி என ஜோடியாக உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டின் படுக்கறையில் வைத்து முதலில் வெளிப்படையாகவே கன்னத்தில் முத்தமிடுகிறார்கள். அதன் பிறகு கேமராவை பார்த்து சுதாரித்துக் கொண்டு போர்வையை மூடி முத்தமிடுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் இந்த செயலை கண்டிக்கும் அதே நேரத்தில் அதை காசுக்காக ஒளிபரப்பும் பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவையும், அதை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனாவையும் பலரும் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் இப்போதே இப்படி என்றால் வருங்காலத்தில் படுக்கறை காட்சியை கூட ஒளிபரப்புவீர்களா? இது மிகவும் அநாகரிகம் ஆபாசம் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.