சென்னை மெட்ரோ ரயில் நிலையம் பொதுமக்கள் திரைப்படங்கள் வெப்சீரிஸ் நாடகங்கள் உள்ளிட்டவற்றை பார்ப்பதற்காகவே புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையம் சுகர் பாக்ஸ் என்ற புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹாட்ஸ்டார் செயலியை போலவே இதன் இந்த செயலி மூலம் சுகர் பாக்ஸ் மூலம் சென்னை மெட்ரோவில் வைஃபை வசதியை பயன்படுத்தி,
தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் உள்ள திரைப்படங்கள் வெப்சீரிஸ் நாடகங்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கண்டுகளிக்கலாம். ஆஃப்லைனில் காண முதலில் அதனை டவுன்லோட் செய்ய வேண்டும். ஒரு முழுநீள படத்தை மெட்ரோ ரயில் வைபை வசதி மூலம் வெறும் பத்து நிமிடத்தில் டவுன்லோட் செய்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.