Categories
தேசிய செய்திகள்

போலீஸ் SIR ”என்னை அனுப்பாதீங்க…. மும்பைக்கு மாத்தாதீங்க” கெஞ்சிய தாதா …!!

என்னை நீங்களே விசாரியுங்க , மும்பைக்கு அனுப்பாதீங்க என்று கைதாக்கியுள்ள நிழலுலக தாதா ரவி பூஜாரி கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு திரைப்பட பாலிவுட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் என பலரையும் மிரட்டிப் பணம் பறித்தது , என 200க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் நிழலுலக தாதா ரவி பூஜாரி. இதையடுத்து தன்னுடைய தாதா வாழ்க்கையை  உலகளவில் தொடர்பை விரிவுபடுத்திக் கொண்ட பூஜாரி, இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று தென் ஆப்ரிக்காவில்  தலைமறைவாக இருந்து வந்தார்.

போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையை கண்டு அஞ்சிய தாதா ரவி பூஜாரி போலி பாஸ்போர்ட் மூலம் செனகல் நாட்டிற்கு குடிபெயர்ந்து , அந்தோணி பெர்னான்டஸ் என்ற பெயரில் வாழ்ந்து வந்துள்ளார்.இதையடுத்து செனகல் நாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல நிழலுலக தாதா ரவி பூஜாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.

இவரை பெங்களூரில் வைத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலர்கள் விசாரித்து வந்த நிலையில் மும்பைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து என்னை மும்பைக்கு கொண்டு செல்லவேண்டாம் என்று ரவி பூஜாரி  கெஞ்சியுள்ளதாக தெரிகின்றது. மும்பையிலும்  பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட இவருக்கு  தாவூத் இப்ராஹிமுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதால் அங்குள்ள மும்பை காவல்துறையினர் தன்னை கொடுமையான முறையில் விசாரிப்பார்கள் என்ற பீதியில் தாதா ரவி பூஜாரி அரண்டு போயுள்ளார்.

Categories

Tech |