சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் தொழிலதிபர் அரவிந்த் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவரது 12 வயது மகன் கீழ்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து தினமும் ஆட்டோவில் சிறுவன் செல்வது வழக்கம். அதனைப் போல நேற்று முன் தினம் பள்ளி முடிந்த சிறுவன் வழக்கம்போல் செல்ல ஆட்டோவுக்காக காத்திருந்தார். ஆனால் வழக்கமாக வரும் ஆட்டோ தாமதமானதாக கூறப்படுகிறது. அங்கு வந்த ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் சிறுவனை கடத்தினர் பூந்தமல்லி நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி அருகில் ஆட்டோ வந்தபோது சிக்னலில் நின்றது.
அப்போது சாமர்த்தியமாக சிறுவன் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பினார். அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் சிறுவன் சென்றான். அப்போது அங்குள்ள போலீசாரிடம் நடந்ததை கூறினார். அதற்குள் மர்ம கும்பல் ஆட்டோவில் தப்பிவிட்டனர். அதன் பிறகு சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டார். சிறுவனிடம் கேட்டு அவரின் தந்தை மொபைல் போன் எண்ணிற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து இந்த சம்பவ இடத்திற்கு சிறுவனின் தந்தை அரவிந்த் சர்மா உடனடியாக சென்றார். அவரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அரவிந்த் சர்மா அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர். மேலும் சிறுவன் கடத்தல் நாடகமாய் இருக்குமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.