Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!… “PS-1” காட்சிகள்….. இணையத்தில் லீக்….. அதிர்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள்….!!!!

PS-1″ காட்சிகள் இணையத்தில் லீக்கானதால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதுவரை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல்…

இதனையடுத்து, ஓ. டி. டி. தளத்தில் இந்த படத்தின் எச்டி தரத்துடன் பைரசி வெளியாகிவிட்டது. இதிலிருந்து தங்களுக்கு பிடித்தமான பல காட்சிகளை பலரும் துண்டு துண்டாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனை பட தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது அமேசான் பிரைம் நிறுவனம் தடுத்து நிறுத்தாமல் உள்ளனர். இது தியேட்டர்களில் இந்த படத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |