Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மீண்டு வருவோம்…! முதல் 6 ஓவர் மோசமாக ஆடினோம்….. தோல்விக்கு பின் கேப்டன் பாபர் அசாம் பேசியது என்ன?

நாங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் வலுவாக திரும்புவோம்” என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்..

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானின் தூண்களாக கருதப்படும் கேப்டன் பாபர் அசாம் (4) மற்றும் முகமது ரிஸ்வான் (14) சொற்பரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அதன்பின் வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டனர். சிறப்பாக ஆடி வந்த சான் மசூத் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 15. 1 ஓவரில் 94/6 என்று பரிதவித்தது பாகிஸ்தான்.. அப்போது முகமது நவாஸ் – முகமது வசீம் இருவரும் ஜோடி சேர்ந்து  தட்டி தட்டி ரன்களைசேர்த்தனர். பின் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டபோது, ரிச்சர்ட் ங்கராவா வீசிய 19 ஆவது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தில் 3 ரன்கள் கிடைக்க இரண்டாவது பந்தை முகமது வசீம் பவுண்டரி அடித்தார். பின் மூன்றாவது பந்து ரன் ஏதும் வரவில்லை. தொடர்ந்து நான்காவது பந்தில் 1 ரன் கிடைத்தது. இறுதியில் கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது நவாஸ் தூக்கி அடித்து கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார்.  இறுதியில் ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது உள்ளே வந்த ஷாஹின் சா அப்ரிடி அடித்து விட்டு 2 ரன்கள் ஓடும்போது ரன் அவுட் ஆனார். 1 ரன் மட்டுமே கிடைத்தது..

பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.. அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டுகளும், பிராட் எவன்ஸ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருது பெற்றார்.. இதனால் ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 2 தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணிக்கு  அரை இறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட கனவாகவே மாறிப் போய்விட்டது. இனிவரும் மூன்று போட்டியிலும் வென்றால் கூட அதிக ரன் ரேட்டில் அவர்கள் வெற்றி அடைய வேண்டும். அதே சமயம் தென்னாப்பிரிக்கா இந்திய அணியிடம் தோல்வி அடைய வேண்டும். மேலும் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் குறைந்தது ஒன்று மற்றும் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும்.. இப்படி நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு.. ஆனால் அதெல்லாம் நடக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாபர் அசாம்  மிகவும் சோர்வடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தோல்விக்கு பின் அவர் பேசியதாவது, “எனது அணியின் செயல்பாடு (ஆட்டம்) மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. . பேட்டிங்கில் நாங்கள் சரியாக ஆடவில்லை. பேட்டிங்கில் நாங்கள் முதல் ஆறு ஓவர்கள் மோசமாக இருந்தோம், ஆனால் ஷதாப் மற்றும் ஷான் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஷதாப், அவுட் ஆனார். பின் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் பேட்டிங்கில் அழுத்தம் காணப்பட்டது.” என்றார்.

மேலும் “பந்துவீசும்போது முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் புதிய பந்தை நன்றாகப் பயன்படுத்தவில்லை. பின்னர் நாங்கள் நன்றாக முடித்தோம். நாங்கள் ஒன்றாக அமர்ந்து எங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் வலுவாக திரும்புவோம்” என்று கூறினார்.

அதாவது, பாகிஸ்தான் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளும் என்றும், டி20 உலகக் கோப்பையின் வரவிருக்கும் போட்டிகளில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தும் என்றும் பாபர் உறுதியளித்தார்.

Categories

Tech |