Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென சரிந்து விழுந்த நெல் மூட்டைகள்…. அலறி துடித்த லாரி ஓட்டினர்…. போலீஸ் விசாரணை…!!!

நெல் முட்டைகள் சரிந்து விழுந்ததால் லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் யோகேஸ்வரர் தெருவில் பிரம்மநாயகம் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாபு என்பவருக்கு சொந்தமான லாரியை ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சத்யகலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து நெல் முட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு பிரம்மநாயகம் அரிசி ஆலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அரிசி ஆலைக்கு சென்றவுடன் நெல் மூட்டைகளை இறக்குவதற்காக லாரியின் மீது போடப்பட்டிருந்த தார்ப்பாயை பிரம்மநாயகம் அவிழ்த்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக 8 நெல் மூட்டைகள் ஒன்றின் பின் ஒன்றாக பிரம்மநாயகம் மீது சரிந்து விழுந்ததால் அவர் அலறி துடித்தார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நெல் மூட்டைகளை அகற்றி பிரம்மநாயகத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரம்மநாயகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |