Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 4  மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால்  5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்யும். இந்நிலையில் வருகின்ற  1-ஆம் தேதி  மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதனையடுத்து சென்னையை  பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனையடுத்து அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |