சென்னையில் உள்ள உயர் நீதிமன்றம் அருகே பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதுதான் தலைநகரின் முதல் பேருந்து நிலையம் ஆகும். இந்த விஷயம் பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். பிராட்வே பேருந்து நிலையத்தை தொடர்ந்து தான் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்கள் போன்றவைகள் வந்தது. அதன்பிறகு பிராட்வே பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில்களும் இருக்கிறது.
இந்த பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் 695 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் 70 வழித்தடங்களில் செல்கிறது. இந்த வழித்தடங்களில் ஒரு நாளைக்கு 3,872 முறை சொல்கிறது. இந்நிலையில் பிராட்வே பேருந்து நிலையத்தில் சிஎம்ஆர்எல் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.
அதன்படி மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தங்களிடம் இருக்கும் 4.42 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி, 21 மாடிகள் கொண்ட மல்டி மாடல் கட்டிடத்தை கட்ட இருக்கிறது. இந்த கட்டிடமான்து முதல் பகுதியில் 80 பேருந்துகளும், 2-வது பகுதியில் 44 பேருந்துகளும் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட இருப்பதுடன், கட்டிடத்திற்குள் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள் போன்றவைகளும் வரவிருக்கிறது.
இதற்காக முறையாக மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற பிறகு டெண்டர் கோரப்படும். தகுதியான நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கிய பிறகு மல்டி மாடல் கட்டிடத்தை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும். இந்த பணிகள் முடிவடைவதற்கு 2 வருடங்கள் ஆகும் என்பதால் அதுவரை பேருந்துகள் அனைத்தும் வெளியே இருந்து செல்லுமாறு ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் மேற்கண்ட தகவலை சிஎம்ஆர்எல் செய்தி தொடர்பாளர் எல். கிரிராஜன் தெரிவித்துள்ளார்.