Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புகையிலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்….. கோர்ட் அதிரடி உத்தரவு.‌..!!!!

மதுரை ஹைகோர்ட்டில் புகையிலை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து இயற்கையாக விளைவிக்கப்படும் புகையிலைக்கும் தடை விதித்துள்ளனர். எனவே இயற்கை புகையிலை விற்பனைக்கு விதிக்கப்பட்ட  தடையை நீக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி முன்னிலையில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த இயற்கையாக விளைவிக்கப்படும் புகையிலேயே பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.

விவசாயிகளிடமிருந்து பெறப்படும் இயற்கை புகையிலையில் வெல்ல நீர் தெளித்து, வேதிப்பொருள் எதையும் சேர்க்காமல் விற்பனை செய்யலாம். ஆனால் இயற்கை புகையிலையாக  இருந்தாலும் அதிலும் நிகோடின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. வேடசந்தூர் பகுதியில் தமிழக அரசே இயற்கை புகையிலை விவசாயத்தை பண்ணை அமைத்து செய்து வருகிறது. இயற்கை புகையிலை விவசாயத்திற்கு தடை விதிக்காத போது புகையிலைக்கு மட்டும் எப்படி தடை விதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இயற்கை புகையிலை விற்பனைக்கு எவ்வித தடையும் கிடையாது என உத்தரவிட்டார் .

Categories

Tech |