சேலம் அருகே காவலரை வாலிபர்கள் துரத்தி துரத்தி தாக்கிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அசோக் என்பவர் காவலராக பணியாற்றி வருகின்றார் இவர் ரோந்து வாகன ஓட்டுனராக இருக்கின்றார். இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி அவருக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் சின்ன திருப்பதி வந்து கொண்டிருந்தபோது மூன்று இருசக்கர வாகனத்தில் பயணித்த ஐந்து பேர் மோதுவது போல் வேகமாக வந்துள்ளனர். இதனை பார்த்த காவலர் அசோக் அவரை கண்டித்துள்ளார். இதனால் அசோகுக்கும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் இதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
திடீரென காவலர் அசோக்கை இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் தாக்கியுள்ளனர். அப்போது அசோக் நான் காவலர் என தெரிவித்துள்ளார். ஆனால் அதையும் கேட்காமல் அந்த வாலிபர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்துள்ளனர் இதனை அடுத்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இது பற்றி வழக்கு பதிவு செய்து அப்துல் ரகுமான்(20), ரியான் பாஷா (19), அஸ்லாம் அலி(19), ரிகான் பாஷா (20) போன்றோரை கைது செய்துள்ளனர். இதில் ரிஸ்வான் என்பவர் தலைமறைவாகியுள்ளார். மேலும் இது பற்றி போலீஸில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் காவலரை துரத்தி துரத்தி தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.