Categories
தேசிய செய்திகள்

சட்டப்பிரிவு 370 ரத்து…. மாநிலத்தில் பயங்கரவாத வழக்கு 34% குறைப்பு…. அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச உள்துறை அமைச்சர்கள் மற்றும் உள்துறை செயலாளர்கள் ஆகியோர்கள் இரண்டு நாள் னசித்தன் முகாமில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் அமித் ஷா, நாட்டில் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவை திருத்தப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும். சிஆர்பிசி மற்றும் ஐபிசியை சரியான நேரத்தில் திருத்துவது குறித்து பல ஆலோசனைகளை பெறப்பட்டுள்ளது. அவை சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்கள் உள்ளடக்கிய வரைவு மசோதாவில் நாடாளுமன்ற தாக்கல் செய்யப்படும்.

அதனை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு கூடுதல் அதிகாரங்களுடன் பலப்படுத்தும். என்ஐஏவுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதாகவும்,‌ 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகளை திறக்க முடிவு செய்துள்ளது. எல்லை தாண்டிய குற்றங்களை தடுக்க மாநிலங்களில் மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும். மேலும் சட்டப்பிரிவு 370 தடை செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகள் 34%, கொல்லப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையில் 64% குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |