பட்டாசு கடையில் தகராறில் ஈடுபட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைப்பட்டி களத்து வீடு பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கரையாம்பட்டி பகுதியில் வசிக்கும் அஜித், ஆகாஷ் ஆகி இருவரும் ராஜகோபாலின் கடைக்கு சென்ற பட்டாசு வாங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 100 ரூபாய் குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் இது தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் ராஜகோபால், ஆகாஷ், மூர்த்தி, அஜித் ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.