கொரானா வைரஸ் பாதிப்பால் உலகமே பயத்தில் கலங்கி இருக்கும் வேளையில் அதை பயன்படுத்திய ஹேக்கர்கள் கணினி மூலம் நுழைந்து மோசடி செய்வதற்கு ஒரு கூட்டம் முயல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஜப்பானுக்கு கணினி வைரஸ் மென்பொருளை மின்னஞ்சலில்(Email ) அனுப்பிய அவர்களின் தகவல் திருடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்னஞ்சல்களில் “நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி கொண்டிருக்கிறது”.
இந்த வைரஸ் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமா? இந்த “இணைப்பை கிளிக் செய்யுங்கள்” என்பது போன்ற செய்திகளை மின்னஞ்சலில் அனுப்பி தகவல் திருடப்படுகிறது.
மேலும் கணினியில் உள்ள தகவல்களை திருடப்பட்டத்தோடு கணினி வைரசால் பாதிக்கப்பட்டு விடும். எனவே அனைத்து மின்னஞ்சல்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.