அரியனாவின் சூரஜ்கண்டில் மாநில உள்துறை அமைச்சர்கள் இரண்டாவது நாள் மாநாடு நடைபெற்றது. அதில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி ‘ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை’ என்ற யோசனையை முன் வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவது காவல்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை தேவை. ‘ஒரே நாடு ஒரே சேவை’ என்பது காவல்துறைக்கு வழங்கக்கூடிய ஒரு யோசனை தான். இதை நான் உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை. மாநிலங்களுக்கு வெவ்வேறு எண்கள் மட்டும் சின்னங்கள் இருக்கலாம். ஆனால் இது மாநிலங்கள் மற்றும் காவல்துறை நிறுவனங்களிடையே விவாதக்கூடிய விஷயமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் 5,50 அல்லது 100 ஆண்டுகளில் இந்த யோசனையின் நடைமுறைக்கு வரலாம். நாடு முழுவதும் காவல்துறை அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கும். அதனை தொடர்ந்து காவல்துறை பற்றி நல்ல கருத்தை பேணுவது மிக முக்கியமானது. இங்கே உள்ள தவறுகள் கவனிக்கப்பட வேண்டும். காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து செயல் திறன் அதன் சிறந்த விளைவு மற்றும் சாமானியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் சிறந்த முடிவுகளை அடைவதற்கு காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மனித நுண்ணறிவை உருவாக்கும் நல்ல பழைய அமைப்பு முறையை பலப்படுத்தப்பட வேண்டும். இதனையடுத்து காவல்துறை தொழில்நுட்பை இயக்கத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த பணி இந்தியாவில் காவல்துறை வலுப்படுத்த தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்கள் மற்றும் செயல்முறைகளை அறிமுகப்படுத்தும். நமது காவல்துறையினரை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுதலை வழங்க வேண்டும். புதிய ஸ்கிராபேஜ் கொள்கையின் போலிஸ் படைகள் தங்கள் வாகனங்கள் மதிப்பீடு செய்ய வேண்டு.ம் காவல்துறை வாகனங்கள் ஒரு பொது பழையதாக இருக்கக்கூடாது. ஏனென்றால் அது அவற்றின் செயல் திறன் இணைக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் அல்லது ஆயுதங்கள் அல்லது போதை பொருள் கடத்தலுக்கு டிரான்களை பயன்படுத்தினாலும் அச்சுறுத்தலை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களை நோக்கி அரசு தொடர்ந்து பணியாற்ற வேண்டும். மேலும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சட்ட ஒழுங்கு அமைப்பை மேம்படுத்த முடியும். 5ஜக தொழில்நுட்பம் இதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.