Categories
மாநில செய்திகள்

#BREAKING : ரூ1,000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

ரூ 1000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நவம்பர் 1 முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவிகள் உயர் கல்வியில் சேரும் பொழுது அவர்கள் எந்த படிப்பில் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஏற்கனவே மூவலூர் இராமாமிர்தம் என்ற பெயரிலான உதவித்திட்டம் என்பது புதுமைப்பெண் என்ற பெயரில் திட்டமாக ஏற்கனவே தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் ஏற்கனவே 2, 3, 4 ஆகிய ஆண்டுகளில் படிக்கக்கூடிய மாணவிகளும், முதுநிலை படிக்கக்கூடிய மாணவிகளும் ஏற்கனவே விண்ணப்பித்து அவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதனிடையே முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. மிக குறிப்பாக மாணவிகள் தங்களது உயர் கல்வி உறுதி செய்யும் விதமாக மாணவிகள் தங்களுடைய முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியதன் பின்பாக ஒரு மாதத்திற்கு பின் இந்த செயல்பாடுகள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் ஏற்கனவே இதற்கான நடைமுறைகள் சென்று கொண்டிருக்கின்றன. இதன்படி மாணவிகள் அவர்கள் படிக்கக்கூடிய கல்லூரிகள் மூலமாக இதற்காக விண்ணப்பிக்க முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முதலாம் ஆண்டு தவிர்த்து மற்ற ஆண்டு படிக்கக்கூடிய மாணவிகள் ஏற்கனவே விண்ணப்பித்து அதற்கான பயன்களை பெற்று வந்தார்கள்.

தற்போது முதலாம் ஆண்டு படிக்கக்கூடிய மாணவிகளுக்கு இந்த உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையானது செலுத்தப்படுவதற்காக நவம்பர் 1ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக  அனைத்து படிப்பிலும் முதலாம் ஆண்டு படித்துள்ள மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தல்கள் ஏற்கனவே கல்லூரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கொடுக்கப்பட்டது. அதன் மூலமாக அவர்கள் தேவையான கருத்துக்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |