நடிகர் தனுஷ் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கதிரேசன் மீனாட்சி என்னும் தம்பதி நடிகர் தனுஷ் எங்கள் மகன் என்றும் 60,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் கதிரேசன் தரப்பில் மதுரை மாவட்ட ஆறாவது மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனுஷ் தாக்கல் செய்த சான்றிதழ் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் முத்துராமன் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.