வெள்ளிதிரையை போன்று சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி சின்னத்திரை நடிகர்கள் பொருளாதாரஅளவிலும் நல்ல வளர்ச்சி அடைந்து வருகின்றனர்.
ஒரு சீரியலில் கமிட்டாகி அந்த சீரியல் ஹிட்டானாலே வீடு, கார் என செட்டில் ஆகி விடுகின்றனர். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிகை ஹேமா மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது ஒரு வைர கம்மலை வாங்கியுள்ளார்.
இதன் விலை சுமார் 9 லட்சம் ரூபாய் ஆகும். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படத்தை நடிகை ஹேமா தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் ஒரு சீரியலில் நடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை சம்பளமாக பெற்று வருகிறார். மேலும் நடிகை ஹேமா வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.