Categories
மாநில செய்திகள்

நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19%ஆக அதிகரிப்பு… உடனடியாக அமல்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழக அரசின் கோரிக்கையின் பெயரில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை காரணமாக 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நிலை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் தமிழகத்தில் அண்மையில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து விவசாயிகளின் கவலையை போக்கும் விதமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உணவுத்துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் சார்பில் அண்மையில் கடிதம் எழுதப்பட்டிருந்தது. மேலும் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயனும் மதிய உணவுத்துறை செயலாளர் சந்தித்து 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |