Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உள்நோக்கத்துடனே வதந்திகளை பரப்புகின்றனர்”…. இலங்கை தமிழர் குடியிருப்புகள் குறித்து…. கலெக்டர் வெளியிட்ட தகவல்….!!!!

வேலூர் மாவட்டத்தில் வேல்மொண ஊரில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியினை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் கட்டுமான பணிகளில் எந்த காரணத்திற்கு கொண்டும் தரம் குறைவாக இருக்கக் கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது “இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணிகளை கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டை தொடங்கி வைத்துள்ளார்.

தற்போது இந்த திட்டமானது ஐந்து தொகுப்பு தொகுப்புகளாக 220 வீடுகள் கட்டப்படுகின்றது. இதில் 144 வீடுகளில் ஆரம்ப கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையால் கடந்த ஐந்து நாட்களாக கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நேற்று முதல் மீண்டும் பணிகள் நடைபெற தொடங்கியதால் குறைந்த அளவிலான பணியாளர்களே வேலைக்கு வந்துள்ளனர். வெளியூர் சென்றிருக்கும் கட்டுமான பணியாளர்கள் விரைவில் ஊர் திரும்புவார்கள். அதன் பின் முழுமையான பணிகள் நடைபெறும்.

அது மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் இந்த இடத்தில் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். அதற்கான வேலைகளும் விரைவில் தொடங்கும். இதனை அடுத்து வாரம் ஒரு முறை கட்டுமான பணிகள் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக சமூக வலைதளங்களில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் தரம் இல்லாமல் கட்டப்படுவதாக வதந்தி பரவி வருகின்றது. இதில் உள்நோக்கம் உள்ளது. மேலும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் இந்த பணி முற்றிலுமாக நிறைவடையும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |