இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஏழு பேரையும் அவர்களுடைய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படை படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை வெதுவாக பாதிக்கிறது.
பாகிஸ்தான் ஜல சந்தியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும். தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை மீனவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை தேவை. தமிழக மீனவர்கள் ஏழு பேரையும் அவர்களுடன் மீன்பிடி படங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்