விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்க திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
திரிபுரா மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுஷாந்தா செளத்ரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பாக பிரிவு சி மற்றும் பிரிவு டி பிரிவுகளின் கீழ் உள்ள அரசு பணியிடங்களுக்காக இந்த இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகிறார்.
அதேபோல் தற்போது அறிவித்துள்ள இந்த இட ஒதுக்கீடு பலருக்கும் விளையாட்டு துறையில் ஆர்வத்தை உருவாக்கும். மேலும் மகராஷ்டிரம், ஆந்திரம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு குறித்து ஆலோசித்தோம். அப்போது சில மாநிலங்கள் விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு அரசு வேலையில் 2 இருந்து 4 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது. அதேபோல் நமது மாநிலத்திலும் கேலே இந்தியா திட்டத்தின் கீழ் 39 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை விளையாட்டு துறைக்காக செய்து கொடுத்துள்ளது. மேலும் விளையாட்டு துறையினை ஊக்குவிக்க மாநில அரசு 22 கோடி வழங்கும் என அவர் கூறியுள்ளார்.