Categories
உலக செய்திகள்

இறப்புக்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?…. ஆவிகளிடம் நேரடியாக கேட்ட “பிரபல நாட்டு இளம் பெண்”….!!!!

பிரபல நாட்டில் ஒரு பெண் மனிதர்களிடம் பேசுவதைப் போல ஆவிகளிடமும் பேசி வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள Wilmington என்னும் இடத்தில் ரெபேக்கா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் Wilmington என்னும் நகரம் தான் நாட்டிலேயே அதிக பேய்கள் நடமாடும் இடமாக கருதுகிறார். அந்த இடத்தில் வாழும் அவர் சற்று வித்தியாசமான அனுபவங்களை சந்தித்து வருகிறார். அதாவது ஆவி நடமாட்டம், பேய், பூதம் என பயப்படாமல் அவற்றுடன் அவர் சாதாரணமாக பேசி வருவதாக தெரிவிக்கிறார். இந்நிலையில் அப்படி ஒரு ஆவியிடம் இறப்புக்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டாராம். அதற்கு நான் உயிருடன் இருக்கும்போது வழக்கமாக நதி ஒன்றுக்கு செல்வது போல இப்போதும் சென்று கொண்டிருந்த அந்த ஆவியிடம் இப்போது வாழ்க்கை நன்றாக இருக்கிறதா என்று கேட்க நன்றாக இருக்கிறது என்று சொன்னாதான் அந்த ஆவி.

உடனே அந்த ஆவிக்கு வாழ்த்து சொல்லி விடை கொடுத்துள்ளார். மேலும் சமீபத்தில் உயிரிழந்த சிலருடைய ஆவிகளை சந்திக்கும் போது மட்டும் அவை  நோய்வாய்ப்பட்டது போலவும், காயம்பட்டது போலவும் காணப்படுமாம். ஆனால்  நம்பிக்கை வந்தால் மட்டுமே ஆவிகள் தன் வாழ்வில் என்ன நடந்தது, தான் எப்படி கொடூரமாக கொல்லப்பட்டேன் என்பது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |