Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி புது காலனி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மகள் சம்யுக்தா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று வயிறு வலிப்பதாக கூறிவிட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சிறுமி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமி தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |