Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த மனசு தான் கடவுள்”… உயிருக்கு போராடிய பெண்…. உதவிக்கரம் நீட்டிய பிரபல தயாரிப்பாளர்…. குவியும் பாராட்டு…‌!!!!!

சென்னையில் காவிரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் உறுப்பு இடை நார்திசை நுரையீரல் பாதிப்பு காரணமாக ஒரு பெண்மணி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண்
கணவன் இல்லாமல் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக தழும்புகள் மற்றும் வடுக்கள் போன்றவைகள் ஏற்பட்டதால் 2 நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவரின் பெயர் தமிழ்நாடு உறுப்பு மாற்ற ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அந்த பெண்மணியின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ செலவுகளை பெருமளவு குறைத்ததோடு சில தன்னார்வலர்களிடம் இருந்து நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட பிரபல சினிமா தயாரிப்பாளர் எஸ். தாணு, அப்பெண்ணுக்கு உதவுவதற்கு முன் வந்துள்ளார்.

அதன்படி சிகிச்சைக்காக ரூபாய் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காசோலையை அவர் கொடுத்துள்ளார். இந்த காசோலையை அந்த பெண்ணின் குடும்பத்தின் சார்பாக மருத்துவர் யாமினி கண்ணப்பன் மற்றும் மருத்துவர் ஐயப்பன் பொன்னுசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும் சினிமா தயாரிப்பாளர் எஸ்‌. தாணுவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |