தேவையான பொருட்கள்
- தண்ணீர் – 1 கப்
- தேயிலை – 1 டீஸ்பூன்
- எலுமிச்சை பழம் – பாதி பழம்
- சர்க்கரை – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து கொள்ளவும்.
அதனுடன் தேயிலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
பின்னர் எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளவும்.
இறுதியாக தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கொதித்ததும் இறக்கிவிடவும்.